தொடர் விடுமுறை... கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!!

Chennai airport
சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15தேதி நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வார இறுதி நாட்களான சனி (ஆகஸ்ட் 16) , ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17)) என தொடர் விடுமுறை காரணமாக விமானம் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து மதுரை , சேலம், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது வழக்கமாக சென்னை - மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.4000 ஆக இருக்கும். ஆனால் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ21,867 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1827 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.15,546 ஆகவும் அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விமான கட்டண உயர்வு குறித்து பல புகார்கள் எழுந்தபோதும் மத்திய அரசு கட்டண உயர்வை தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
