கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!
X

covai airport

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், தனியார் பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் அடிக்கடி மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் மூலம் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுந்து விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story