மதுபிரியர்கள் ஷாக்..! நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!!

மது விற்பனை
தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் பார்கள், மதுபான விடுதிகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் எந்தக் கடையும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி, தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியில் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால் மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து, சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
