இந்தியாவில் வெள்ளி நகைகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு!!

இந்தியாவில் வெள்ளி நகைகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு!!
X

silver

இந்தியாவில் வெள்ளி நகைகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது.

2024-25ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் முதல் முதல் 2025-26 ஏப்ரல்-ஜூன் வரை சலுகை வரி விலக்குகள் மூலம் வெள்ளி நகைகள் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால்தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. FTA விதிகளை மீறி இறக்குமதி செய்வது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கிறது. இது நகைத்துறையில் வேலை வாய்ப்புகளுக்கும் சவாலாக உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுபோன்ற சூழலில் அரசின் இந்த முடிவு இந்திய நகை தயாரிப்பாளர்களுக்கு ஒரு சமமான வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும். மேலும், இந்த துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. வெள்ளி நகைகளை அதிகமாக இறக்குமதி செய்தால் நம் நாட்டில் இருக்கும் சிறிய நகை கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் வியாபாரம் சரியாகச் செய்யாலமல் கஷ்டப்படுவார்கள். அதனால்தான் மத்திய அரசு இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்துள்ளது. இதுனால் உள்நாட்டு நகை தொழிலாளிகளின் வாழ்க்கை மேம்படும். வெளிநாட்டில் இருந்து வெள்ளி நகைகள் இறக்குமதி செய்யப்படுவது குறைந்தால் நம் நாட்டில் இருக்கும் நகை கடைகளில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். இதன் மூலம் நிறைய பேருக்கு வேலையும் கிடைக்கும். எனவே அரசின் இந்த முடிவு வரவேற்பைப் பெற்றுள்ளது. மறுபுறம், அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக நலிவடைந்துள்ள நகை மற்றும் வைர வியாபாரத்திற்கு உதவ GJEPC தலைவர் கிரீட் பன்சாலி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். உடனடியாக நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது நல்ல செய்தி. ஆனால், இதற்கு அதிக காலம் ஆகலாம். அதுவரை இந்தத் தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா சமீபத்தில் வைர மற்றும் நகை ஏற்றுமதிக்கு 50 சதவீதம் வரி விதித்தது. இதனால் இந்திய வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்தத் துறையை காப்பாற்ற நிவாரண நடவடிக்கைகள் தேவை என்று கிரீட் பன்சாலி கூறியுள்ளார். அதாவது, பேச்சுவார்த்தை முடியும் வரை அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story