கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு; மேலும் ஒருவர் கைது!!

karur stamepede
கடந்த 27- ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு வந்தார். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்பிக்கள் சியாமளாதேவி மற்றும் விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
