உச்சம் தொட்ட தங்கம் விலை!!

உச்சம் தொட்ட தங்கம் விலை!!
X

Gold

ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் ஏழை முதல் பணக்காரர்கள் வரையிலும் அனைவருமே நமது நாட்டில் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். கலாச்சார ரீதியாக ஒரு காரணம் இருக்கும் அதேநேரம் ஆபத்தான சூழல்களில் தங்கம் கை கொடுக்கும் என்பது மற்றொரு காரணமாகும். தங்கம் விலை கடந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டிருந்தது. இந்தாண்டாவது தங்கம் விலை குறையும் என ஆர்வமாகப் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இருப்பினும், இந்தாண்டு தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை. தொடர்ந்து அது சீராக உயர்ந்தே வருகிறது. சனிக்கிழமை கூட தங்கம் விலை இந்தியாவில் உயர்ந்தே இருந்தது. இன்று (ஜன.19) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத வகையில், கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கும் விற்பனையாகிறது.

Next Story