சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!

சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!
X
பல்வேறு கட்டப் பணிகளுக்காகச் சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் 24 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாகச் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆர்.எல்) பல்வேறு கட்டப் பணிகளுக்காகச் சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளில் வரும் ஜனவரி 30-ம் தேதி காலை 10.00 மணி முதல் ஜனவரி 31-ம் தேதி காலை 10.00 மணி வரை என 24 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாகச் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாகத் தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மேற்கொள்ளப்படவுள்ள பிரதான குடிநீர் குழாய் இணைப்பு வேலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் - 9 (தேனாம்பேட்டை): இந்த மண்டலத்தில் வார்டுகள் 109, 110, 111, 112, 113, 117, 118, 119, 121, 122 மற்றும் 123 ஆகியவற்றில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதன் மூலம் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி காலனி, நந்தனம், ஆழ்வார்பேட்டை மற்றும் கோடம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வரும் ஜனவரி 30-ம் தேதி காலை 10.00 மணி முதல் ஜனவரி 31-ம் தேதி காலை 10.00 மணி வரை குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, சென்னை மாநகராட்சி மண்டலம் - 10 (கோடம்பாக்கம்): இந்த மண்டலத்தில் வார்டுகள் 130, 131, 132, 133, 134, 140, 141 மற்றும் 142 ஆகியவற்றில் விநியோகம் இருக்காது. இதனால் வடபழனி (பகுதி), மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை மற்றும் சி.ஐ.டி நகர் ஆகிய பகுதிகளில் ஜனவரி 30-ம் தேதி காலை 10.00 மணி முதல் ஜனவரி 31-ம் தேதி காலை 10.00 மணி வரை குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் - 13 (அடையாறு): இந்த மண்டலத்தில் வார்டு எண் 169-க்கு உட்பட்ட சைதாப்பேட்டை பகுதிகளில் மட்டும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஜனவரி 30-ம் தேதி காலை 10.00 மணி முதல் ஜனவரி 31-ம் தேதி காலை 10.00 மணி வரை குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்பும் பொதுமக்கள் (டயல் ஃபார் வாட்டர்) மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cmwssb.tn.gov.in மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்” சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story