ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!!
X

eps ambulance

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நோயாளியை அழைத்துச் செல்ல முயன்ற 108 ஆம்புலன்ஸ் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த 18ம் தேதி வேலூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது, 108 ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியே வந்துள்ளது. அப்போது அதிமுக கூட்டங்களில் நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆம்பூலன்ஸ் வருவதாக குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும். அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் | சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

Next Story