ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்ந்த வெள்ளி விலை!!

தங்கம் விலை உயர்ந்தது கொண்டே வருகிறது.நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்தியர்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் கடந்தாண்டில் எங்கு விட்டதோ.. அதே இடத்தில் இந்தாண்டை தொடங்கியுள்ளது. ஆரம்பம் முதலே தங்கம் விலை அதிரடியாக ஏறி வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் இந்தியர்கள் கதறினர். நேற்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 8,000 அதிகரித்து, ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8அதிகரித்து. ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், இன்று (ஜன.20) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.330க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.3,30,000க்கும் விற்பனையாகிறது.
