தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!!

stalin
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மன், இங்கிலாந்து பயணம் மூலம் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஹிந்துஜா குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், ரூ.176 கோடியில் சென்னையில் உலகளாவிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மையத்தை அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நிறுவவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.13,016 கோடி முதலீடுகள் மூலம் 17,813 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் உற்பத்தி, ஜவுளி,தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் ரூ.820 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
