விநாயகர் சதுர்த்தி: சிறப்பு பேருந்துகளில் 1.40 லட்சம் பேர் பயணம்!!

சிறப்பு பஸ்கள்
இன்று (ஆக 27) விநாயகர் சதுர்த்தி, ஆக 28 மற்றும் ஆக.29 ( வியாழன் , வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாட்கள் என்பதாலும், அதற்கடுத்த இரு நாட்களும் வார விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி ஓட்டி சென்னை கிளாம்பக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் 675 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 28 அன்று (வியாழக்கிழமை ) 610 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 29 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும், ஆகஸ்ட் 30 சனிக்கிழமை 380 பேருந்துகளும் மற்றும் ஆகஸ்ட் 31 ஞாயிற்றுக்கிழமை அன்று 875 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. அதன்படி விநாயகர் சதுர்த்தி கொட்டி வழக்கமான இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் இதுவரை 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 504 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
