சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600க்கு விற்பனை.. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்தது!!

Gold
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது. உலக அளவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தங்க நகை பயன்பாடு அதிகளவில் உள்ளது. தங்க நகை சேமிப்பு மற்றும் நுகர்வு அதிகரிப்பதால் இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. 2026ம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, அடித்தட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. நேற்று காலை தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது, தங்கம் கிராமிற்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250க்கும், சவரன் ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதாவது ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.165 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,415க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை, மாலை என இரு வேளையும் சேர்த்து ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து, பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730ம், சவரனுக்கு ரூ.5,840ம் அதிகரித்தது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாடுகளில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்து நாட்டின் மீது புதிய வரி விதித்திருப்பதும் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்து ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200க்கு விற்பனையாகிறது. இன்று காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.3,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
