புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு!!

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு!!
X

bussy anand

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து உயிரிழந்தனர். இன்னும் பலர் கலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது.கரூர் நகர காவல் நிலையத்தில், u/s *105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act-ன் படி, A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர், A2. புஸ்ஸி ஆனந்த், A3. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை, BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை, BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது, TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக வெற்றி கழக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சதீஷ் மீது நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக த.வெ.க மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Next Story