கரூர் கூட்ட நெரிசல்; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!!

கரூர் கூட்ட நெரிசல்; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!!
X

karur stamepede

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கவின் (32) என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இன்னும் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் பாதி பேர் அது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில், 12.00 மணிக்கே வந்திருக்க வேண்டிய விஜய் அவர்கள் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், மக்கள் அதிகமாகக் கூடுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதோடு , காத்திருந்த மக்களுக்கு தண்ணீர் உணவு மற்றும் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யாததுதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம்.

Next Story