தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!
X
தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையராக இருந்த இன்னசன்ட் திவ்யா, சுற்றுலா மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சுற்றுலா மேலாண்மை இயக்குநராக இருந்த கிறிஸ்துராஜ், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த விசாகன், தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த உமா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த ரத்னா, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story