தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

rain
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று (ஆக 28) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிக்குள்ளாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
