10 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது!!

தங்கம்
சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். தொடர்ந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,880க்கும், கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,235க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம் தங்க விலை மீண்டும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.73,440க்கும், கிராம் ரூ.9,180க்கும் விற்பனையானது. இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று தங்க விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,840க்கும், கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளிவிலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.126க்கு விற்பனையாகிறது.
