விஜய் பூரண நலமுடன் மக்கள் சேவை புரிய வாழ்த்துக்கள். - ஈபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனது வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனது வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு உள்ளார். தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story