பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவை புறக்கணிக்க முடிவு

பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவை புறக்கணிக்க முடிவு

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய பாஜக வை எதிர் வரக்கூடிய தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் கருத்துறையாற்றினர்.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கூறியதாவது; பட்டியலின மக்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்கும் எதிரானது தான் பாஜக என்பதற்கு அடுக்கடுக்காக ஆயிரம் ஆதாரங்களை நாம் இங்கு வைக்க முடியும்.

இந்திய மக்கள் தொகையின் கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய 50 சதவீத மக்களினுடைய கையில் இருக்கின்ற செல்வம் 2.8 சதவீதமாக இருக்கிற போது, இந்தியாவில் உயர் மட்டத்தில் இருக்கின்ற பெரும் பணக்காரர்கள் ஒரு சதவீதம் பணக்காரர்கள் கையில் நாட்டினுடைய செல்வமதிப்பு 43% இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. இந்த அபரிவிதமான வளர்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய கார்ப்பரேட் ஆதரவு கொள்கை தான் காரணம் இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.

ஆனால் பெருவாரியான மக்களின் கட்சி என்று சொல்லக்கூடிய அந்த பாஜக பெரும்பான்மையான மக்களை பாதிப்பதோடு பட்டியலின மக்களை மிக தீவிரமாக பாதிக்கிறது என்றார். மேலும், கடந்த நான்காண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பட்டியல் மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 2 லட்சம் என்று பாஜக அரசாங்கமும் விவரத்தை தெரிவிக்கின்றது. இரண்டு லட்சம் குற்றங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 43 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது நாடு முழுவதும் நடைபெற்ற and2 லட்சம் குற்றங்களில் முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அதில் 43 ஆயிரம் குற்றங்கள் என்பது அவர்கள் மாடல் ஸ்டேட் சொல்கிற உத்தர பிரதேசத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

எனவே, பட்டியலின மக்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிராக செயல்படக்கூடிய பாஜக வை எதிர் வரக்கூடிய தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக இட ஒதுக்கீடு மற்றும் சமத்துவத்தை ஏற்க மறுக்கிற பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags

Next Story