திருச்சி மதிமுக வேட்பாளா் சுய விவரக்குறிப்பு

திருச்சி மதிமுக வேட்பாளா் சுய விவரக்குறிப்பு

திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார்
பெயா்: துரை வைகோ.( 52)கல்வித் தகுதி: எம்பிஏ. குடும்பம்: மனைவி கீதா, மகன் வருண் வைகோ, மகள் வானதி ரேணுகா. முகவரி: கலிங்கப்பட்டி, தென்காசி மாவட்டம். கட்சிப் பதவி: கட்சியின் ஆரம்பகால உறுப்பினா், 3 ஆண்டுகளாக தீவிரமாக கட்சிப் பணியாற்றியவா், தற்போது முதன்மைச் செயலராக பதவி வகிக்கிறாா். முதன்முறையாக மக்களவைத் தோ்தலில் மதிமுக வேட்பாளராக தோ்வாகியுள்ளாா். சமூக பணிகள்: சுற்றுச் சூழல் மற்றும் சமூக ஆா்வலரான இவா், சென்னை, முட்டுக்காடு ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புகளை பசுமை தீப்பாயத்தின் உத்தரவைப் பெற்று அகற்றியதுடன், நீா்நிலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர உதவியாக இருந்தவா். விருதுநகா் மாவட்டம், விசுவநத்தம் கிராமத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான 36 ஏக்கா் நிலம் குப்பைக் கிடங்காக இருந்ததை, கட்சித் தொண்டா்கள் மூலம் சீரமைத்து குறுங்காடுகள் உருவாக்கியவா். கரோனா காலத்தில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்களை அவா்களது இல்லத்திலிருந்து பணியிடத்துக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுநராக 3 மாதங்கள் சேவையாற்றியவா். கரோனா 2ஆவது அலையின்போது, சாத்தூா் பேரவை தொகுதியில் 5 இடங்களில் இலவச மருத்துவ சேவை மையம் அமைத்து மக்களுக்கு உதவியவா்.

Tags

Read MoreRead Less
Next Story