வேலூரில் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம்!

வேலூரில் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம்!

 மன்சூர் அலிகான்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். அவர் வேலூர் காந்தி ரோடு, பாபுராவ் தெரு, சுண்ணாம்புக்கார வீதி, லாங்கு பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார். முன்னதாக அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை மேற்கொண்டார். பிரசாரத்தில் ஈடுபட்ட அவருடன், அப்பகுதி பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story