பாமக-பாஜக டெல்லி மேலிடம் பேச்சு வார்த்தை!

பாமக-பாஜக டெல்லி மேலிடம் பேச்சு வார்த்தை!

பாமக-பாஜக

தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி பாஜக மேலிடம் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜக மேலிடம் டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸிடம் கூட்டணி தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பாமகவிற்கு தொடர்ந்து அழைப்புகள் விடுத்து வருகின்றன.

கடந்த 2019 தேர்தலை பொருத்தவரையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக-வானது 7 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்பொழுது பாமக 9 தொகுதிகள் வரை வலியுறுத்தி வருகிறது. அதிமுக பாமக இடையே ஆன ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தற்போது பாமக டெல்லி மேலிட பொறுப்பாளர்களுடன் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் பாமக சார்பில் காணொளி காட்சி வாயிலாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன்படி பாமக எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்று மாலை முடிவுகள் எட்டப்பட்டு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story