ராமநாதபுரம் : பாம்பன் புதிய ரயில் பால பணிகள் 90 சதவீதம் நிறைவு

ராமநாதபுரம் : பாம்பன் புதிய ரயில் பால பணிகள் 90 சதவீதம் நிறைவு

பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணிகள் 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில்,செங்குத்து பாலத்தினை பொருத்த கப்பல்கள் கடந்து செல்லும் கால்வாய்க்குள் தற்காலிக தூண்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்து டிசம்பர் மாதம் ரயில் சேவை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவிற்கு செல்ல பாம்பன் கடல் பகுதிகளில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து பாம்பனில் இருந்து செங்குத்து பாலம் நகர்த்தி விசைப்படகுகள், கப்பல்கள் கடந்து செல்லும் கால்வாயில் பொருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்காக கால்வாயில் தற்காலிக தூண்கள் அமைக்கும் பணியில் பணியாட்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூண்கள் அமைத்து பிறகு தண்டவாளத்தில் இருக்கும் செங்குத்து பாலத்தினை நகரத்தி அதனை பொறுத்தி இயக்கிவிடப்பட்டால் பணிகள் அனைத்தும் முடிந்து பயணிகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story