சற்று உயர்ந்த கேஸ் சிலிண்டரின் விலை! எவ்வளவு?

சற்று உயர்ந்த கேஸ் சிலிண்டரின் விலை! எவ்வளவு?

சிலிண்டர் விலை

வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் சற்று உயர்ந்துள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்காக 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று வரை சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் 1809.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.

இதனால் சென்னையில் 1817 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று (01.08.2024) முதல் 1817 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story