TN Budget 2024: இது லிஸ்ட்ல இல்லையே என்ற அளவுக்கு பட்ஜெட்டை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Budget 2024: தமிழ்நாடு பட்ஜெட்டில் புதுமைப்பெண் திட்டம், மூன்றாம் பாலினத்தவரின் உயர்கல்வியை அரசே ஏற்கும், ஸ்மார்ட் வகுப்பறைகள், இல்லம் தேடி கல்வி, பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட கல்வி சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை குறி வைத்துள்ளார்.
வரும் 2024-2025ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நடைபெற்று வருகிறது. நேற்றிய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் விதமாக முக்கிய பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட்டது.
பட்ஜெட் குறித்து பேசிய தங்கம் தென்னரசு, ” பள்ளி மாணவிகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக புதுமை பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 தமிழக அரசு வழங்கி வருகிறது. அதை தொடர்ந்து வரும் நிதியாண்டில் இருந்து பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க தமி புதல்வன் என்னும் திட்டத்தை தொடங்க இருப்பதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.
இதேபோல், அரசுப்பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமை பெண் திட்டத்தில் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும், தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்” என்றார்.
இதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோல் உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்ற அமைச்சர், ரூ.300 கோடி செலவில் பள்ளிகளில் 15000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்குப்படும் என்றார்.
இதற்கெல்லாம் மேலாக இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடியும், பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, அதிகமானோர் கல்லூரி படிப்பை தொடர்கின்றனர். தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்தவர்களில் மொத்தமாக 51.4 சதவீதத்தினர், கல்லூரிகளில் சேர்கின்றனர். இதேபோல் கல்வி கற்கும் மாணவர்களின் விகித்டத்தில் சீனா 43 சதவீதமும், மலேசியா 45சதவீதமும், பஹ்ரைன் 47 சதவீதத்திலும் உள்ளது. ஆனால், தமிழகம் மட்டும் 49 சதவீதமாக இருந்து பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.
மாணவர்கள் வருங்காலம் என்பதை உணர்ந்த திமுக அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கி கவனத்தை ஈர்த்துள்ளது.