தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு!!

தங்கம் 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17 ஆம் தேதி ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23 ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அன்றைய தினம் 58 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த செவ்வாய்கிழமை 800 ரூபாயும் நேற்று முன்தினம் 960 ரூபாயும் என சவரனுக்கு 1 ஆயிரத்து 760 ரூபாய் குறைந்தது. இதையடுத்து நேற்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 7 ஆயிரம் 090 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story