வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக அதிகரிப்பு!!

வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக அதிகரிப்பு!!

 தக்காளி விலை 

வரத்து குறைந்து வருவதால் தக்காளி ஒரு கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இந்த நிலையில் வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது மேலும் அதிகரித்து சதத்தை தாண்டி உள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.80 வரை விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள கடை, காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்து விட்டனர். தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

Tags

Next Story