வெறும் ரூ.1000 தான்... வந்தாச்சு யுபிஐ வசதியுடன் கூடிய நோக்கியா போன்... இனி பட்டன் செல்லில் பரிவர்த்தனை!

வெறும் ரூ.1000 தான்... வந்தாச்சு யுபிஐ வசதியுடன் கூடிய நோக்கியா போன்... இனி பட்டன் செல்லில் பரிவர்த்தனை!
X

நோக்கியா 

நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிக்கும் பின்லாந்தை சேர்ந்த HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 105 கிளாசிக் ஃபீச்சர் (Feature) போனை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2ஜி ஃபீச்சர் மொபைல் ஆல்ஃபா நியுமெரிக் கீபேட் மற்றும் இன்-பில்ட் UPI அப்ளிகேஷனுடன் வருகிறது.

நிறுவனம் இந்த மொபைலை வாங்குவோருக்கு ஓராண்டுக்கான ரீபிளேஸ்மென்ட் உத்தரவாதத்தையும் (replacement guarantee) வழங்குகிறது.

விலை விவரங்கள்: புதிய நோக்கியா 105 கிளாசிக் ரூ.999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் சார்க்கோல் மற்றும் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இந்த 2ஜி ஃபீச்சர் ஃபோன் இந்தியாவில் கடந்த அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

HMD Global நிறுவனம் இந்த மொபைலை சிங்கிள் ஒற்றை சிம், டூயல் சிம், சார்ஜர் மற்றும் சார்ஜர் இல்லாமல் என 4 வெவ்வேறு ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மொபைலின் Ergonomic டிசைன், கீஸ்களுக்கு இடையே கவனமாக ஒதுக்கப்பட்ட ஸ்பேஸ் உள்ளிட்டவை யூஸர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்தும் என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த மொபைலை Nokia.com, ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் பிற ரீடெயில் விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி கொள்ளலாம்.

Tags

Next Story