கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை
படகு சாவரி செய்த சுற்றுலா பயணிகள்
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று முதல் திங்கட்கிழமை வரை, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது,
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் பிற்பகல் வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது, அதனை தொடர்ந்து மாலை வேளையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது, குறிப்பாக அப்சர்வேட்டரி,
ஏரிச் சாலை, ஆனந்தகிரி, அண்ணா சாலை, கல்லு குழி, கலையரங்கம், மூஞ்சிக்கல், நாயுடுபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும், மேல் மலை கிராமங்களான மன்னவனூர்,
கூக்கால்,பூம்பாறை உள்ளிட்ட மலைகிராமங்களில் ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்தது, இதனால் அப்பகுதியில் எரிந்து வந்த காட்டு தீ முடிவுக்கு வரப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது, நீண்ட நாளைக்கு பின்பு பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன ர்,
மேலும் மழையில் நனைந்தப்படி சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு உற்சாகம் அடைந்து வருகின்றனர்,திடீரென மழை பெய்ததால் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.