மாமல்லபுரத்தின் பழங்காலத்து கல்வெட்டுகளும் சிற்பங்களும்!
மாமல்லபுரம்
மாமல்லபுரத்தை காண வருபவர்கள் முதலில் பார்ப்பவை ஒரு பெரும் பாறையும் அதில் வடிக்கப்பட்டுள்ள அமர சிற்பங்களுமே. இந்த சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள். 96 அடி நீளமும் 30 அடி உயரமும் உள்ள இந்த பாறை மதிலில் 150 சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன. பல்லவர் காலத்தில் இது முக்கிய வாணிக துறை முகமாக விளங்கியது .இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலூமிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் இப்போது கரையில் ஒரே ஒரு கற்கோயில் தான் இருக்கிறது தெய்வங்கள், தேவர்கள் ,கந்தர் வர்கள், மனிதர்கள், நாகராஜன், முதலியவர்களையும் யானை ,சிங்கம் ,சிறுத்தை, குரங்கு, பூனை பறவைகள் இவற்றையும் உயிர் சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள் . இந்தப் பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்தஇடைவெளி ஒன்று இருக்கிறது இது இரண்டு பாகமாக பாறையை பிரிக்கிறது. வடக்கு பாகத்தில் சிவபெருமானையும் தவக்கோலத்தில் நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும் கீழே சிறு விஷ்ணு கோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிர் உள்ளவை போலவே தேவர்களும், தேவியரும் சிலையுருவில் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். யானைகளின் கம்பீரத் தோற்றம் மான் ஒன்று தன் பின்னங்காலால் முகத்தை சொரிந்து கொள்ளும் காட்சி துறவி தவம் செய்யும் கோலம் கிருஷ்ணப்பிரான் கோவர்த்தன கிரியை குடையாக பிடித்த காட்சி பஞ்சபாண்டவர் மண்டபம் பசுமண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபம் ஒன்பது கலசங்களுடன் செதுக்கப்பட்ட கணேச ரதம் யானை, மான் ,குரங்கு ,மயில்முதலிய சிற்பங்கள் இவையெல்லாம் பார்ப்பவரின் மனம் கவரும் காட்சிகள் .பிரம்மா, விஷ்ணு ,சிவன் மூவருக்கும் மூன்று கர்ப்ப கிரகங்கள் வடமேற்கில் மும்மூர்த்தி மண்டபமும் உள்ளது. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஒரு எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது .மகாபலியின் கர்வத்தை அடக்கி உலகளந்த திருமாலின் சிற்பக் காட்சிகள் காணத் தகுந்தவை மூன்று புற சுவர் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன .தெற்கு ராமானுஜ மண்டபமும் இதற்கு மேலே முன்பு கலங்கரை விளக்கமாக பயன்பட்ட ஒரு கோபுரமும் முற்றுப்பெறாத ராயகோபுரம் இருக்கிறது குன்றுக்கு தெற்கே பாண்டவ ரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் சீறி நிற்பது போன்ற கல்சிங்கம் ஒன்றும் அதன் பின்னால் கம்பீரமான யானை ஒன்றும் ரதக்கோயில்களும் இவை அனைத்தையும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.