திருப்பத்தூரின் திருப்புகழ் !
ஏலகிரி மலை
திருப்பத்தூர் நகரம் ஜவ்வாது மலை ஏலகிரி மலை என இரண்டு பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சம் அருவிகள் நீரோடைகள் காடுகள் என காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் ரம்மியமான மலையாகும். இம்மலையின் பீமன் அருவியும் அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன. ஜவ்வாது மலையில் இருந்து செய்யாறு ஆரணி ஆறு கமண்டல நாக நதி ஆறு மிருகண்டா நதி ஆகிய ஆறுகள் உற்பத்தி ஆகின்றன.
இம்மலை வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மலையாளி என்ற பழங்குடி இனத்தவர்கள் ஆவார். சந்தனம் விளையும் ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதாலும் பெரிய சந்தன கிடங்கு உள்ளதாலும் திருப்பத்தூரை 'சந்தன மாநகர்' என அழைக்கப்படுவதும் உண்டு. இம்மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் தயாரிக்கப்படும் 'பிரியாணி' உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தோல் தொழிற்சாலைகள் அதிகம் அமையப்பெற்று அந்நிய செலவாணி அதிகம் ஈட்டி தருவதோடு மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்து வருகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆற்காட்டில் இருந்து மைசூருக்கு சென்ற ஆங்கிலப்படைகள் வழியில் திருப்பத்தூரை சென்றடைந்தன அங்கு அவர்கள் தாகம் தணிக்க பொது கிணற்றை நாடி உள்ளனர் ஆனால் தாய் மண்ணின் மீது இருந்த பற்றாலும் ஆங்கிலேயர் மீது இருந்த வெறுப்பு உணர்வாலும் அவர்களுக்கு தண்ணீர் மட்டும் உணவு பொருட்களை அளிக்க மறுத்துவிட்டதோடு மட்டுமல்லாமல் இரவில் ஆங்கிலப்படைகள் செல்லும் பாதையில் கற்களையும் மரங்களையும் வெட்டி போட்டு எதிர்ப்பு தெரிவித்த தேசப்பற்று மிக்க மக்கள் வாழ்ந்த மாவட்டம் தான் திருப்பத்தூர் மாவட்டம் ஆகும்..