பசுமை நிறைந்த தேனியின் சிறப்புகள் !

பசுமை நிறைந்த தேனியின் சிறப்புகள் !

தேனி

தேனி மாவட்டம் இயற்கையிலேயே பசுமையும் அனைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிறைந்த மாவட்டம் . இம்மாவட்டத்தில் வைகை அணை ,மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, பச்சிலை நாச்சியம்மன் அணை உள்ளிட்ட பல அணைகளும், சுருளி அருவி, கும்பக்கரை அருவி ,மேகமலை அருவி, எலிவால் அருவி என பல அருவிகளும் உள்ளன. மலைகளில் இளவரசியான நீலகிரியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரத்தின் ரம்யமான சூழலுக்கு நிகரான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது .தேனி மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மலைகள், காடுகள் ஆறுகள், ஓடைகள் ,அருவிகள் ,அணைகள் குளங்கள் தோட்டங்கள் விளைநிலங்கள் என இயற்கை எழில் கொஞ்சம் பசுமை மாவட்டமாக திகழும் தேனி மாவட்டம் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆற்காடு நவாப் மற்றும் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டு உள்ளது .தற்போது நேரு சிலை அமைந்திருக்கும் முக்கூட்டு சாலையில் நடைபெறும் மாநில சந்தையில் கூடும் மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து பார்க்கும்போது தேன் அடையில் மொய்க்கும் தேனீ கூட்டத்தைப் போல் தோன்றியதால் இந்த பகுதிக்கு தேனீ என்று சுவையான பெயர் ஏற்பட்டதாகவே உள்ளது. கூடலூரில் இருந்து வீரபாண்டி வரை 6100 ஹெக்டேர் பரப்பளவில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேனி மாவட்டம் வேளாண் சார்ந்த மாவட்டமாக அமைந்து வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. நாடு, மதம் ,மொழி ,இனம் இனம் இவற்றை கடந்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்த கர்ணல் ஜான் பென்னிகுயிக்..

முல்லைப் பெரியாறு அணை," சிறிய பிருந்தாவனம்" என்று அழைக்கப்படும் வைகை அணை பூங்கா, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, தேக்கடி ,மேகமலை கொழுக்கு மலை ,அகமலை என பல சுற்றுலா தலங்களை தன்னகத்தேக் கொண்டது தேனி மாவட்டம்.

வைகை அணை

கிபி 1958 ல் காமராசரால் ஆண்டிப்பட்டிக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் வைகை அணை கட்டப்பட்டுள்ளது .வைகை அணையை அடுத்து இருபுறமும் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இருபுறமும் உள்ள பூங்காக்களுக்கு செல்ல முடியும். நீர்வளம் மிக்க காலத்தில் இங்கு செயல்படும் கண்ணைக் கவரும் ஒளி அமைப்புகள் நெஞ்சை அள்ளும் அழகு சூழலை உருவாக்குகின்றன .இதனால் வைகை அணை சிறந்த சுற்றுலா மையமாகவும் விளங்கி வருகிறது .

சோத்துப்பாறை அணை

தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணையாகும். பண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லை குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார்களாம் பிரார்த்தனைக்கு பிறகு வாழையிலை போடாமலேயே பாறையை கழுவி உணவுப்படைப்பார்களாம் .பாயாசம் சாப்பிட்டவுடன் மழை கொட்டுமாம். இப்படி ஒரு மூடநம்பிக்கையின் காரணமாகவே சோத்துப்பாறை என பெயர் வந்தது

முல்லைப் பெரியாறு அணை

அணையின் உயரம் 158 அடி பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியார் அணை என்று அழைக்கப்பட்ட இவ்வனை முல்லையாறு மற்றும் பெரியார் இரண்டும் சேரும் இடத்தின் கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து" முல்லைப் பெரியாறு அணை "என்ற பெயரால் அழைக்கப்படுகிறது

சுருளி நீர்வீழ்ச்சி

18 ஆம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக் கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளுடைய மிகவும் புகழ்பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சி ஆகும் .

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டத்தின் "சின்ன குற்றாலம்"என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி .பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .மேற்கு மலை தொடர்ச்சியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவி. மருத மரங்களின் வேர்களின் இடையே இந்த அருவியில் குளித்தால் வாத நோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கை.

மேகமலை

எட்டு திசையும் மலை சிகரங்களால் சூழப்பட்டு நடுவே உள்ள பள்ளத்தாக்கு தான் மேகமலை .தமிழகத்தில் உள்ள மலை வாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கில் கிழக்கு பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத்தொடர் ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளாலும், இன்னொரு பக்கம் வருசநாடு மலைத்தொடராலும் இணைந்துள்ளது பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு பக்கமும் கரை கொண்ட வாய்க்கால் போல மலைகள் உயர்ந்து நிற்க, இரு மலையின் முகடுகள் வரை தேயிலைச் செடிகள் காணப்படுகின்றன .இந்த மலைச்சாலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன.

Tags

Next Story