வண்டலூரின் வர்ணங்கள் !

வண்டலூரின் வர்ணங்கள் !

வண்டலூர் 

கலிங்க போரில் வென்ற கருணாகர தொண்டைமான் பிறந்த ஊர். இங்கு உயிரியல் பூங்கா அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகம். உலகில் இருக்கும் தலைசிறந்த விலங்குகளும் பறவைகளும் இந்த பூங்காவில் உள்ளன .1836 இல் இந்தியாவில் கால் பதித்த பால்ஃபர் என்ற ஆங்கிலேயர் மருத்துவராக நாடு முழுவதும் சுற்றி இந்தி பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். பால்ஃபர் சென்னை அருங்காட்சியத்தின் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு புலி ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார் இந்த விலங்குகளை பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர் இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும் கூட்டம் அதிகரித்தது விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது அருங்காட்சியத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கிருப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர் மெட்ராஸில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார் இதன் மூலம் 1855 இல் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்காவன "மெட்ராஸ் உயிரியல் பூங்கா" தொடங்கப்பட்டது 1975இல் பூங்காவும் வளர்ந்து விட்டது மெட்ராஸும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது ஆனால் நகரின் மையப் பகுதியில்இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால் இங்கிருந்து வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாக புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்து வைத்தார். இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதன் நிழலில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாரிக் கொண்டிருக்கின்றன இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் தான் தற்போது உள்ள விலங்குகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கண்டு களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே பூங்காவில் இரவில் தங்கி வனவிலங்குகளை பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

Tags

Next Story