" ஏழைகளின் ஊட்டி" ஏலகிரி மலை!

 ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலை!

ஏலகிரி மலை

" ஏழைகளின் ஊட்டி "என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடை வாழ்விடம். கொண்டை ஊசி வளைவுகளும் பசுமை பள்ளத்தாக்குகளும் அழகிய நீர்வீழ்ச்சியும் ஏலகிரியை சின்ன ஊட்டி என்று சொல்ல வைக்கின்றன. இங்கு 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் கம்பர் இளங்கோ போன்ற தமிழ் புலவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன .ஏலகிரியில் 14 சிறு கிராமங்கள் உள்ளன இந்த மலையின் வடக்கு மற்றும் வடகிழக்கு சரிவுகளிலும் மலை உச்சியிலும் பசுமை மாறா மரங்கள் காணப்படுகின்றன. மேலும் ஏலகிரியில் சுற்றிப் பார்க்க அரசு மூலிகை பண்ணை இயற்கை பூங்கா இசை நீரூற்று முருகன் கோயில் என பல இடங்கள் உள்ளன. மேலும் புங்கனூர் ஏரியில் படகு சவாரி செய்யலாம். இந்த புங்கனூர் ஏரி மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை ஏரி என்பதால் பாதுகாப்பாக படகில் பயணம் செய்யலாம் .இது இயற்கை எழில் மிகுந்து காண்போரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தலமாகும் .தமிழகத்திலேயே இங்குதான் "பாரா க்ளைடிங் "எனப்படும் பாராசூட்டில் பறக்கும் பயிற்சி வழங்குகின்றனர் துணிச்சலான சாகச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஏலகிரி சாகச முகாம் உள்ளது .சாகச விளையாட்டு பிரியர்களிடையே ஏலகிரி பிரபலமானதாக விளங்குகிறது. இந்த மலையின் மீது சிவன் கோயில், முருகன் கோயில் மற்றும் சுவாமிமலை குன்று முதலான மலைவாசஸ் ஸ்தலங்களும் உள்ளது. இந்த ஏலகிரி மலையில் சுற்றுலா தான் பிரதானம். மலையேறும் பயிற்சி பெறுபவர்கள் மலையேற்றத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏலகிரி மலை அருமையான இடம் அதற்கான வசதிகள் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சாகச பயணங்களுக்கும் மலையேற்றத்திற்கும் ஏற்ற இடம் இது. மலையேற்றம் பாராகிளைடிங் போன்ற விளையாட்டுகள் விளையாட இங்கே அனுமதி உண்டு .இவை ஏலகிரியை இளையவர்களையும் முதியவர்களையும் ஒரு சேர ஈர்க்கும் சுற்றுலா தலமாக ஆக்குகிறது. மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்தின் இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மூலம் ஆனந்தம் அடைகின்றனர் கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர் இங்கிருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் பார்த்து மகிழலாம்.மலைப் பாதையில் நுழையும்போதே ஏலகிரி மலையின் அழகை ரசிக்க டெலஸ்கோப் வசதி உள்ளது. இதை பரண் டெலஸ்கோப் என்கின்றனர் ஏலகிரி மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏலகிரி யின் முழு அழகையும் கண்களால் காண முடியும்.

Tags

Next Story