தாஜ்மஹால் சிறப்புகள் !

தாஜ்மஹால் சிறப்புகள் !

தாஜ்மஹால்

தாஜ்மஹால் பல பாரம்பரிய, கலாச்சார, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட இந்தியாவின் தாஜ்மஹால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட விசேஷமானது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் தாஜ்மஹால் 'உலகின் மிகவும் இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட கலாச்சார பாரம்பரிய தளமாக' இப்போது மாறியுள்ளது.

32 மில்லியன் ரூபாய் செலவில், 1632-1653 ஆண்டு கால கட்டத்தில், நுட்பமான வேலைகளை கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது.

பல சிறப்புகள் அடங்கிய தாஜ்மஹால் 2007 ஆம் ஆண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் தாஜ்மஹாலைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்தியாவின் பெருமைமிகு தாஜ்மஹால் உலக அளவில் முதலிடம் பிடித்த கலாச்சார நினைவுச்சின்னமாக மாறியுள்ளது.

Tags

Next Story