மூங்கில்காடு பகுதிக்கு செல்ல கூடிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மூங்கில்காடு பகுதிக்கு செல்ல கூடிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

4வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காய்ச்சலால்,கரையில் காத்திருந்த தாய் மற்றும் சிறுவனை 4 மணி நேரத்திற்கு பிறகு கயிறு மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கோட்டாட்சியர் மற்றும் தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது,இந்நிலையில் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை,மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது,மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் காலை வேளையில் கயிற்றை பிடித்து கடந்து வந்தனர்.

மேலும் ஒரு சில கிராம மக்கள் கிராமத்திலேயே முடங்கினர்,இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் சவுந்தர்யா என்ற தாய்,தனது 4 வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல ஆற்று கரையிலேயே 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார்,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாட்சியர் சிவராம் மற்றும் தீயணைப்பு துறையினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் தாயை தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்,இதனை தொடர்ந்து தாய் மற்றும் மகனை கோட்டாட்சியர் தனது வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்,மேலும் மழைக்காலங்களில் இந்த ஆற்றை கடப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும்,குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள்,முதியோர்கள் உள்ளிட்ட ஆற்றை கடப்பது மிகவும் சவலாக இருப்பதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்,மேலும் மழைக்காலங்களில் விளை பொருட்களை வெளியில் கொண்டு வர முடியாமலும்,அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கிராமத்திலேயே முடங்குவதாக இப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பகுதிக்கு விரைவில் பாலம் அமைக்க வேண்டும் இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வந்த கோட்டாட்சியர் விரைவில் பாலம் அமைத்து தரப்படும் எனவும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி தருவதாகவும் , இந்த கிராமம் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் கயிறு மூலம் மீட்ட தாயிடம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி போனில் பாதிப்பு குறித்து தகவல்களை கேட்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story