கரூர் மாவட்ட வரலாறுகளும் அதன் சிறப்புகளும்

கரூர் மாவட்ட வரலாறுகளும் அதன் சிறப்புகளும்

பொன்னி ஆறு அணைக்கட்டு

தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த பட்டணங்களில் ஒன்றான கரூர் மாவட்டம் விவசாயம், தொழில்வளம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியிலும் முன்னிலையில் உள்ள மாவட்டம் ஆகும் . கொசுவலைகளும் இங்கு சிறப்பாக தயாரிக்ப்படுகிறது .இந்த மாவட்டத்தில் 1800 கோடி ரூபாய் முதலீட்டில் கொசு வலை தயாரிக்கும் உற்பத்தியில் கரூர் மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டிற்கும் கொசுவலை தயாரித்து அனுப்பக்கூடிய ஆற்றல் வாய்ந்தவராக இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் தோகை மலையில் கிடைக்கும் வண்ண பளிங்கு கற்கள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளன. இங்கு விளைகின்ற முருங்கை காய்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது . கரூர் மாவட்டத்தில் கடலூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னி ஆறு அணைக்கட்டு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது . இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

Tags

Next Story