கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது,
குறிப்பாக வனப் பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன்மரக்காடுகள் ஆகிய சுற்றுலாதலங்களில் காணப்படும் மேகக் கூட்டங்களையும், இயற்கை எழில் காட்சிகளையும்,
மலை முகடுகளையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாறி மாறி நிலவும் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான காலநிலையை அனுபவித்தவாறு மகிழ்ந்து வருகின்றனர், மேலும் நகரின் மையப் பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தும், பிரயண்ட் பூங்காவில் பூக்கத்துவங்கியுள்ள பூக்களை ரசித்தும், ஏரிச்சாலையை சுற்றி குதிரைசவாரி,
சைக்கிள் சவாரி செய்தும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து உற்சாகமடைந்து வருகின்றனர்,வார விடுமுறை தினங்களில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.