கர்நாடகாவின் மல்லாலி நீர்வீழ்ச்சி !

கர்நாடகாவின் மல்லாலி நீர்வீழ்ச்சி !

மல்லாலி நீர்வீழ்ச்சி

மல்லாலி நீர்வீழ்ச்சி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் சோம்வார்பேட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புஷ்பகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மல்லாலி அருவி அமைந்துள்ளது . மல்லாலி நீர்வீழ்ச்சிக்கு குமார தாதா நதி நீர் ஊற்றுகிறது.

இந்த ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இரண்டு படிகளில் 200 அடிக்கு மேல் விழுந்து மல்லால்லி அருவியை உருவாக்குகிறது. இங்கிருந்து குறுக்கே சுப்பிரமணியம் வழியாக பாய்ந்து உப்பிணங்காடியில் உள்ள நேத்ராவதி ஆற்றில் கலக்கிறது. இது பின்னர் மங்களூரில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு பிரமிக்க வைக்கும் காட்சியாகும் . சுற்றுலா பயணிகளுக்கு செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் அதை சுற்றியுள்ள பசுமையான மலைகளில் அழகிய காட்சியை வழங்குகிறது.மல்லால்லி நீர்வீழ்ச்சியை சுற்றி உள்ள மலைகள் மிகவும் பிரபலமானவை மலைப்பாதைகள் மிகவும் குறுகலான மற்றும் அழகான மலைப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளன.

இது இந்த மலையற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. நீர்நிலைகள் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மலைப்பகுதியில் கீழே பாய்கின்றது. இந்த நேரத்தில் நிலப்பரப்பு பசுமையாக காட்சியளிக்கிறது மற்றும் நீர்வீழ்ச்சிகள் இயற்கை அழகை கூட்டுகிறது. கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட மல்லாளி அருவி உள்ளது. கூர்க் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த இயற்கை அதிசயத்தை தவறாமல் பார்க்க வேண்டும்.

Tags

Next Story