குச்சனூர் சனி பகவான்!
குச்சனூர் சனி பகவான்
நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்க பெறுபவராகவும். திகழ்ந்தவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளை பற்றியும் குச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனிஸ்வரன் ஆலயத்தை பற்றி பார்க்கலாம். 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவரும் இல்லை என்பது வழக்கில் உள்ள சொல் . 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக எந்தவித சிரமங்கள் கஷ்டங்கள் தோல்விகள் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர்களும் கிடையாது அதேபோல கஷ்டங்களை மட்டுமே அனுபவித்தவர்களும் கிடையாது என்பது பொருளாகும். மேலும் சனி கொடுப்பதை யாரும் தடுக்கவும் முடியாது கெடுக்கவும் முடியாது என்பது நம்பிக்கையாகும் சனி பகவான் நீதி நேர்மைக்கும் உழைப்பிற்கும் காரகர் ஆவார் எனவே உழைப்பிற்கு அஞ்சாதவர்களுக்கு சனிபகவான் அள்ளிக் கொடுப்பதற்கு தவறுவதில்லை சனி பகவான் மக்களை தன் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய காலங்களான ஏழரை சனி கண்ட சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி ஆகிய காலங்களில் சற்று சிரமங்களை கொடுக்கிறார் ஜாதக ரீதியாக சனிபகவான் தரும் சிரமங்களை குறைத்துக் கொள்வதற்காக சனி பகவானின் அருள் கடாட்சம் மிகுந்த ஸ்தலங்களில் வழிபாடு செய்வது சிறப்பு .சனி பகவான் சுயம்புவாக உதித்து தன்னை நாடி வருபவர்களுக்கு இன்பம் தரும் ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்தது குச்சனூர் ஆகும் குச்சனூர் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது இங்கு சனி பகவான் சுரபி ஆற்றங்கரையில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் இவர் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே இருப்பதாக நம்பிக்கை மேலும் பிரம்ம ஹத்திதோஷத்தால் பீடிக்கப்பட்ட சனி பகவான் இந்த தோசநிவர்த்தி பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறதுசனிக்கு எத்தனை பரிகாரத்தலங்கள் இருந்தாலும் குச்சனூரில் மட்டுமே சுயம்புவாக அமைந்துள்ளார் மேலும் சனியின் விருட்சமான வன்னி மரத்தடியில் மூலவர் அமைந்துள்ளது சிறப்பு .சனிபகவான் உத்தியோகத்திற்கு பொறுப்பு வகிக்கிறார் எனவே உத்தியோகத்தில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்கு இங்கு வழிபட்டு வருவது சிறப்பு.