மாணிக்கமாய் ஜொலிக்கும் மணிமுத்தாறு அருவி!

மாணிக்கமாய் ஜொலிக்கும் மணிமுத்தாறு அருவி!

மணிமுத்தாறு அருவி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி. இந்த அருவி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் வெப்பத்தை தணிக்க நீர் நிலைகளை தேடி பொதுமக்கள் செல்கின்றனர்.


மணிமுத்தாறு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் 25 அடி உயரத்திலிருந்து கீழே பாய்ந்து இந்த அழகிய நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவியில், பொதுமக்கள் குளிக்கும் தடாகம் ,தடுப்பு கம்பிகள், உள்ளிட்டவை கடும் சேதமானதை தொடர்ந்து, வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்புக் கம்பிகள் ,கான்கிரீட் அமைப்பது ,உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தினமும் காலை எட்டு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அருவிக்கு குழந்தைகளுடன் சென்று கோடை விடுமுறையை கொண்டாடுங்கள்.

Tags

Next Story