முக்கொம்பு அணைக்கட்டு !

முக்கொம்பு அணைக்கட்டு !

முக்கொம்பு அணைக்கட்டு !

முக்கொம்பு திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெரிய சுற்றுலாத் தலமாகும் கர்நாடகாவின் தலை காவிரி ஆக உருவெடுத்து ஒற்றைக் காவிரி ஆக வரும் ஆறானது இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாகப் பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது. முக்கொம்பு என்று அழைக்கப்படுகின்ற மேலனை காவிரி ஆற்றினை இரண்டாகப் பிரித்து தண்ணீரை பாசனத்திற்காக காவிரி ஆற்றிலும் வெள்ள நீரை கொள்ளிடம் வழியாகவும் வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டுமானமாகும் இந்த மேலணை மற்ற அணைகளை போல் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் கட்டப்பட்டது அல்ல இந்த மேலணையில் உள்ள கொள்ளிடம் கதவணை தளமட்டம் வரை மேஜர் H.C.காட்டன் மற்றும் மேஜர்A.T. காட்டன் ஆகியோரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த கதவணையில் உள்ள பாலமும் மதகுகளும் கேப்டன் எட்வர்டு லா போர்டு அவர்களால் வடிவமைக்கப்பட்டு 1846 ஆம் ஆண்டு கட்டப்பட்டன அணையில் இருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது மேலும் வெள்ள காலத்தில் மட்டும் பெருகிவரும் நீரானது இவ்வனை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும் இவ்வணையும் சுற்றுலா இடங்களாக திகழ்கின்றன.

Tags

Next Story