நாகப்பட்டினமும் சிறப்புகளும் !

நாகப்பட்டினமும் சிறப்புகளும் !

நாகப்பட்டினம் 

நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாகவே இருந்து வருகிறது .முன்பொரு காலத்தில் வடநாட்டினர் தமிழரை நாகர் என்று அழைத்தனர் அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினம் ஆயிற்று நாகப்பட்டினத்தில் மற்றொரு பெயர்" நீர் பெயர்ற்று"காவிரி பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் பெயர் பெற்ற துறைமுக பட்டினமாக விளங்கியது .சோழர் ஆட்சியில் "சோழகுல வல்லிப்பட்டினம் "என்ற பெயரை பெற்றிருந்தது வாணிக துறைமுக பட்டினம் ஆகவே இருந்து வந்துள்ளது கிபி _10-ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை வாயுவெளிப்பட்டுள்ளது அக்கால மக்கள் இயற்கை வாயு வெளிப்பட்ட கிணற்றை புகையுண்ணிகிணறு என்று வழங்கியுள்ளனர் தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போரச்சுகீசியருக்கு தாரைவார்த்தனர் .தென்னிந்திய இ ரயில்வேயின் தொழிற் கூடம் பல ஆண்டுகள் நாகையில் இருந்தது 1928 -ல் இத்தொழிற்கூடம் திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்பட்டது .இதன் விளைவாக தொழிலாளர்கள் நாகையிலிருந்து பொன்மலைக்கு சென்றனர். விடுதலைக்குப் பின் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991 அக்டோபர் 18ஆம் நாள் நாகையை தலைநகராகக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது .தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தமிழில் புதினஇலக்கியத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த நீதி அரசர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த மாவட்டம் இது .நாகப்பட்டினம் முற்கால சோழர்களின் பன்னாட்டு வாணிக மையமாகவும் சிறந்த துறைமுகமாகவும் விளங்கியது அதிகமான கப்பல்கள் வந்து செல்வதால் சங்க கால தமிழர் நாவாய் என்னும் கப்பல்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வாணிகம் செய்தனர் இதனால் இந்த ஊரினை நாவல்பட்டினம் என்று அழைத்தார்கள் இதுதான் பின்னாளில் நாகப்பட்டினம் என்று மருவியது .இதே நாகை மாவட்டத்தில் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் துறைமுகமும் பன்னாட்டு வாணிக மையமாக திகழ்ந்தது கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூர் நாகை மாவட்டத்தில் உள்ளது சைவ சமய குறவர்களின் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தலம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது .,"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழியுடன் சிறப்புற்று விளங்கும் ஆன்மீக நகரமாக திகழும்மாயூரம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது .அதற்கு காரணம் ஆயிரம் வருடங்கள் கங்கையில் தினம் தினம் நீராடினால் கிடைக்கும் புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் துலா கட்ட காவிரியில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவேரி புஷ்கரணி விழா நடைபெறும்.

மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் செய்ய தண்டியாத்திரை தொடங்கிய போது மூதறிஞர் ராஜாஜி தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற வேதாரண்யம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. குடகுமலையில் தோன்றும் புண்ணிய காவிரி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் தான் கடலில் கலக்கிறது விவசாயத்தையும் மீன்பிடி தொழிலையும் இரண்டு முதன்மை தொழிலாக கொண்டு நீர் வளம் நிலவளம் கடல் வளம் ஒருங்கேப்பெற்ற ஒரு உன்னத மாவட்டம் இந்த மாவட்டம். சிலப்பதிகார நீதிக்கு உரியவளான கற்புக்கரசி கண்ணகியும், பொன் ,பொருள், சுகம் ,குடும்பம், சுற்றம் அனைத்தையும் இழந்து முற்றும் துறந்த முனிவராய் முக்காலமும் உணர்ந்த சித்தராய் வாழ்க்கை தத்துவத்தை கூறிய பட்டினத்தார் பிறந்த மண் பூம்புகார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது இங்கு திருமுல்லைவாயில் இருந்து கோடியக்கரை வரையுள்ள சுமார் 120 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்டிருப்பதால் இங்கு மீன் பிடித்தல் மிகச் சிறந்து விளங்குகிறது மேலும் கருவாடும் நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எட்டுக்குடி

நாகைக்கு தென்மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது எட்டி மரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் எட்டுக்குடி என்ற பெயர் பெற்றது அருணகிரிநாதரின் பாடல் பெற்றது எட்டுக்குடி கோயிலில் முருகனை தாங்கும் மயிலின் உருவம் கல்லில் இருந்த போதும் மயிலின் கால்கள் கனமின்றி மென்மையாக இருப்பது காணத்தக்கது. இது ஓர் அரிய வேலை பாடாகும்.

Tags

Next Story