கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கவாத்து பணிகள் தீவிரம்
கவாத்து பணிகளில் ஊழியர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையன்ட் பூங்காவில் எதிர் வரும் ஏப்ரல், மே மாத குளு, குளு சீசன் மற்றும் 61- வது மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பூங்காவில் பல்வேறு விதமான மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று நிறைவடைந்தது.
இந் நிலையில் பூங்காவில் உள்ள 716 வகையான ரோஜா செடிகளுக்கு கவ்வாத்து செய்யும் பணிகளும், கவ்வாத்து செய்த பின் நோய்களிலிருந்து ரோஜா செடிகளை பாதுகாக்க, ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மருந்து மற்றும் இயற்கை உரங்கள் செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடைந்த பின்னர் அடுத்த 45 நாட்களுக்குள் பல வண்ண ரோஜா பூக்கள் பல வகைகளில் மலர் படுகைகளில் பூத்துக்குழுங்கி காண்பவர் கண்களை வெகுவாக கவரும் வண்ணம் இருக்கும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.