மேகங்கள் உரசி செல்லும் பன்றிமலை !!!

மேகங்கள் உரசி செல்லும் பன்றிமலை !!!

பன்றிமலை

திண்டுக்கல் மாவட்டத்தின் மையத்தில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது இந்த அழகிய பன்றிமலை. சுற்றிலும் பசுமை, சிறு சிறு நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், இதமான வானிலை, நம்மை தொட்டு செல்லும் மேகம் என இந்த இடமே ஒரு அழகான சோலை போல காட்சியளிக்கிறது.


காலையில் ஒரு 8 மணிக்கு நீங்கள் பன்றிமலை நோக்கி பயணிக்கலாம். பைக்கில் பயணம் செய்வது மிகவும் உற்சாகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் உங்கள் கண்களுக்கே ஒன்னும் புலப்படாது.

போகிற வழி முழுக்க இயற்கை அன்னையின் அழகை ரசித்துக் கொண்டே சொல்லலாம். சாலையே தெரியாது. முற்றிலும் பனி மட்டுமே இருக்கிறது. மேகங்கள் உங்களை தொட்டு செல்வதை நீங்களே உணருவீர்கள்.

போகிற வழியில் சூடாக தேநீர், மசாலா பொறி, கடலை என வெவ்வேறு கிராம பாங்கான உணவுகளை நீங்கள் ருசித்துக் கொண்டே போகலாம். அதோடு மிக முக்கியமாக பன்றிமலையில் சூடான சுவையான பரோட்டா கிடைக்கிறது.

முழுவதும் காபிதோட்டம் கம்பளி ஆடைகள், ஜாக்கெட்டுகள் எடுத்து செல்லுங்கள். இங்கே கேம்பிங் போடுவது மிகவும் பிரபலம். சுற்றிலும் அட்டை பூச்சிகள் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது மிக அவசியம்.


பன்றிமலை முழுவதுமே ஒரு அழகிய சுற்றுலாத் தலம் போல தான் இருக்கிறது. நீங்கள் எங்கு நின்றாலும் அழகிய காடுகள், காபி தோட்டங்கள், குடில்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் இங்கே நீங்கள் புல்லா வெளி நீர்வீழ்ச்சி, ஆத்தூர் டேம் நீர்வீழ்ச்சி, பவானி சாகர் அணை ஆகியவற்றை கட்டாயம் பார்வையிட வேண்டும்.

Tags

Read MoreRead Less
Next Story