கோவையின் சிறப்புகள் !

கோவையின் சிறப்புகள் !
தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான கோயமுத்தூர் ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய பேரூர் மற்றும் இதை சுற்றியுள்ள ஊர்களை இணைத்து பேரூர் நாடு என்று அழைக்கப்பட்டது. இதில் ஒரு கிராமமாக இருந்தது தான் இன்றைய கோவை கோவன் என்ற இருளர் தலைவனின் ஆளுகையின் கீழ் இந்நிலப் பகுதி இருந்ததால் கோவன் பதி என்றும் கோவன் புத்தூர் என்றும் அழைக்கப்பட்டது பின்னர் இப்பெயர் திரிந்து கோயமுத்தூர் ஆனது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தான் கோவை சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. 1805 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு கோவை அதன் தலைநகரமானது .1866 இல் கோவை நகராட்சியாக மாற்றப்பட்டது. பண்டைய காலம் முதலே பன்னாட்டு வாணிக மையமாகவும் பருத்தி நெசவில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆகவும் திகழ்ந்து வருகிறது .தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக "வெரைட்டி ஹால் "என்னும் பெயரில் திரையரங்கம் கட்டப்பட்டது. கோயமுத்தூரில் தான் அந்த திரையரங்கம் இப்போது டிலைட்திரையரங்கம் "என்று அழைக்கப்படுகின்றது. இன்று தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகவும் நெசவு ,தேயிலை தொழில், காய்கறி விளைச்சல், ஏற்றுமதி நகர் ரோஜா மலர் சாகுபடி ,மோட்டார் பம்பு செட்டுகள், அரவை பொறி, வார்ப்பாலை, பட்டறை தொழில்களின் மையமாகவும் கோயமுத்தூர் விளங்கிக் கொண்டிருக்கிறது ,வால்பாறை தேயிலை தோட்டங்கள், ஆனைமலை புலிகள், சரணாலயம் டாப்ஸ்லிப், கோவை குற்றாலம், ஆழியாறு அணை ,வேதாத்திரி மகரிஷி யோகா மையம், தாவரவியல் பூங்கா வனக்கல்லூரி அருங்காட்சியகம், ஈஷா யோகா மையம் ஆகியவை பயணிகளை கவரும் சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. கொங்கு என்றால் "மலர் கொத்து" என்றும் "தேன்" என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆலைகளும், கல்விச்சாலைகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நிறைந்து அழகுக்கு அழகு செய்யும் கோவை மாவட்டம் தமிழ்நாட்டில் எழில் நிறைந்த பகுதிகளில் ஒன்று .
சிறுவாணி நீர் கோவை நகருக்கு பெரும் சிறப்பை நல்கி வருகிறது .கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோவை மாவட்டம் மலை வளம் நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலைக்கும் மைசூர் ராஜ்யத்திற்கும் இடையே அமைந்துள்ளது .பொள்ளாச்சி வட்டத்தில் ஆனைமலை உள்ளது அது நீலகிரி மலையின் தொடர்ச்சியாகும் .அதற்கு 32 கிலோமீட்டர் இடையே பாலக்காட்டு கணவாய் அமைந்துள்ளது. ஆனைமலை உச்சியில் உள்ள ஆனைமுடி சிகரம் ,நீலகிரி மலையின் உச்சியா கிய தொட்டபெட்டாவை விட 100 அடி உயரமானது எனவே இதுதான் தென்னிந்தியாவின் மிக உயரமான இடம்.