விருதுநகரின் சிறப்புகள் !

விருதுநகர்
இந்தியாவுக்கு பல பிரதமர்களை உருவாக்கித் தந்து "கிங்மேக்கர்" என்று புகழப்பட்ட கல்விக் கண் திறந்த காமராசர் என்று அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களை உலகுக்கு தந்தது இந்த விருதுநகர் மாவட்டம் ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில், ஸ்பின்னிங் மற்றும் விசைத்தறி தொழில்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் நகரம் சிவகாசி என்றால் வியாபார நகரம் விருதுநகர் ஆகும் விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்வதில் சந்தையாகவும் வியாபார தலைநகரமாகவும் சிறந்து விளங்கியது விருதுநகர் பஞ்சு ,பாக்கு, புகையிலை, காபி ,தேயிலை, ஏலக்காய், சிக்கரி, மிளகாய் மல்லி எண்ணெய் வித்துக்கள் ,தானிய வகைகள் என அனைத்து வகையான தொழில்களும் இங்கு சிறப்பாக நடைபெற்றன.
விருதுநகரில் உள்ள திருச்சுழியில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்தார். தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் இந்த விருதுநகர் மண்ணின் மைந்தராவார் விருதுநகர் பல ஆன்மீக திருத்தலங்களை கொண்டது .சதுரகிரி, சஞ்சீவி மலை பிளவக்கல் அணை ,செண்பகத்தோப்பு ,தேவதானம் அணைக்கட்டு, காட்டு அணில் சரணாலயம் ,அய்யனார் அருவி ,உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும் கொண்டது விருதுநகர். விருதுநகரில் உள்ள தெப்பக்குளம் நாட்டில் எந்த நீர் தேக்கம் வற்றினாலும் இந்த தெப்பக்குளம் எப்போதும் வற்றாமல் இருக்கும். வைப்பாறு, சாஸ்தா கோவில் ஆறு, அர்ஜுனா ஆறு குண்டாறு, கௌசிகா ஆறு ஆகியவை விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் முக்கியமான ஆறுகள் ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் உள்ள நாய்கள் தேசிய அளவில் புகழ் பெற்றவை. ஆலங்குளம் மற்றும் துலுக்கப்பட்டி சிமெண்ட் ஆலைகள் டிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகள் இம்மாவட்டத்தில் உள்ளன .பருத்தி ஆலைகள் நிறைந்த ராஜபாளையம் "பருத்தி நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.