காலம் கடந்தும் ஜொலிக்கும் தாஜ்மஹால் !

காலம் கடந்தும் ஜொலிக்கும் தாஜ்மஹால் !

தாஜ்மஹால்

தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மஹால் முழுவதும் பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இது காதலின் சின்னமாக உலகப் புகழ்பெற்றது. ஏழு உலக அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று ..இக் கட்டிடம் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. ஷாஜஹானின் இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு 21 ஆண்டு களில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. முகலாய மன்னரான ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும், பணபலமும் கொண்ட மன்னர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அரசியல் ரீதியாக மற்ற நாடுகளுடன் சண்டை வரும்போது தன்னுடைய ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் போர் செய்யக்கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை திருமணம் செய்துகொண்டு சுமூகமாக சண்டையை முடித்துக் கொள்வார். இதனால் ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணங்கள் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உலகமே அதிசயிக்கும் வகையில் கல்லறை கட்ட முடிகிறது என்றால் அந்த காதல் உலக அதிசயங்களை விட பேரதிசயமானது தான். ஷாஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது 14 வது குழந்தை குஹாரா பேகம் பிறந்த போது இறந்துவிட்டார். அவர் இறந்த ஒரு வருடம் முழுக்க துயரத்திலேயே மூழ்கி இருந்த ஷாஜகானின் நரைமுடிகளும், வாடிய முகமுமே மனைவியின் மீதான பிரிவையும், காதலையும் உணர்த்தியது. அப்படி ஒரு அன்பால் நிறைந்தது தான் இவர்களது வாழ்க்கை. இந்தியாவிற்கு பெருமையாக காதலின் மகத்துவமாக காட்சியளிக்கும் தாஜ்மஹால் உருவாக காரணமாக இருந்தது மும்தாஜின் அன்பு மட்டும் தான். அந்தப் பேரன்பே ஷாஜகானை தாஜ்மஹாலை கட்ட வைத்தது. இது ஒரு சுற்றுலா தலமாகும்.

Tags

Next Story