சுற்றுலா சொர்க்கம் ஊட்டி !
ஊட்டி
மலைவாசல் தலங்களின் அரசி என அழைக்கப்படும் உதகமண்டலம் சுற்றுலா சொர்க்கமாகும் .இதனால் இந்தியாவின் மற்ற மாநில மக்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் வருகின்றனர் தமிழகத்தில் உள்ள விலங்குகள் புகழிடங்களுள் சிறப்பு பெற்ற முதுமலை புகலிடம் உதக மண்டலம் மைசூர் வழிதடத்தில் இருக்கிறது. உதகமண்டலத்தில் ஓவ்வொராண்டும் மே மாதத்தில் மலர்கண்காட்சி நடைபெறுவது வழக்கம் . மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக பல வெளிநாட்டவர்கள் வருகை புரிகின்றனர் மலர்கள் செடிகள் மூலிகைகள் அரிய வகை தாவரங்கள் என கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உள்ளது.இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு 22ஹெக்டேர். ஊட்டி ஏரி என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள ஏரி ஆகும் .இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த ஏரி உதக மண்டலத்தின் முதன்மை சுற்றுலா தலமாகும். ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது என்றாலும் முதன்மையாக ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்படுகிறது .இந்த ஏரியை சுற்றி யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்தும் இதன் கரையில் தொடர்வண்டி பாதையும் செல்கிறது. கோடைகாலமான மே மாதத்தில் படகு போட்டி போன்றவை இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன ஏரியை ஒட்டி படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் கட்டப்பட்டது. படகுத் துறையில் துடுப்பு படகுகள் , மிதி படகுகள் மோட்டார் படகுகள் போன்றவை உள்ளன."சிம்ஸ்" அரசு மலர் கண்காட்சி பூங்கா .பல வெளிநாட்டு மரங்களும் செடிகளும் இங்கு பயிரிடப்படுகின்றன அழகான மரங்கள் வண்ணமயமான மலர்கள், புல்வெளிகள் ,புதர்கள் கொடிகள் போன்ற பல்வேறு தாவரங்களை இந்த பூங்காவுக்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.