கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அருவிகளில் குளித்து மகிழ்ச்சி

தொடர் விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அருவிகளில் குளித்து மகிழ்ச்சி

கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொண்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதால், மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையில் தங்கி அதன் அழகைக் கண்டு ரசிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் விடுதி வசதிகள் உள்ளன.

மேலும், மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளுக்கு தவறாமல் சென்று நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கொல்லிமலை உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. தொடர் மழையால் கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆகாயகங்கை அருவில் தண்ணீர் கணிசமான அளவு வருகிறது.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக கொல்லிமலைக்கு வந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள வியூ பாயிண்ட், தோட்டக்கலை பண்ணை, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், கொல்லிப்பாவை உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சென்று வந்தனர்.

Tags

Next Story